பழநி மாரியம்மன் கோயிலில் மாசித்திருவிழா கொடியேற்றம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
24பிப் 2021 10:02
பழநி: பழநி மாரியம்மன் கோயில் மாசித் திருவிழாவில் கொடியேற்றமும், கம்பத்திற்கு பூவோடு வைக்கும் விழாவும் நடந்தது. பழநி மாரியம்மன் கோயிலில் மாசித்திருவிழா பிப்.12ல் துவங்கி மார்ச் 4 வரை நடக்கிறது. பிப்.16 ல் திருக்கம்பம் அலங்கரிக்கப்பட்டு கோயில் முன்பு நடப்பட்டது. அதில் பக்தர்கள் பால், மஞ்சள் நீர் ஊற்றி வழிபடுகின்றனர்.நேற்று (பிப்.,23) மாரியம்மன் சன்னதியிலுள்ள கொடி மரத்திற்கு சிறப்பு அபிஷேக பூஜைகள் செய்து இரவு 7:20 மணிக்கு கொடியேற்றம் நடந்தது. திருக்கம்பத்தில் பூவோடு வைக்கப்பட்டது.
மேலும் தங்க மயில் வாகனத்தில் அம்மன் திருஉலா நடந்தது. மாரியம்மன் கோயிலில் மார்ச் 2ல் திருக்கல்யாணம், மார்ச் 3ல் தேரோட்டம் நடக்க உள்ளது. மார்ச் 4 ல் கொடியிறக்குதலுடன் விழா நிறைவு பெறும்.மாரியம்மன் கோயிலில் பக்தர்கள் நேர்த்திக் கடன் செலுத்தியபடி வணங்கி வருகின்றனர். செயல் அலுவலர் கிராந்திகுமார் பாடி, துணை ஆணையர் செந்தில்குமார் செய்து வருகின்றனர்.