குருவாயூர் கோவில் உற்சவம் யானைகள் ஓட்டத்துடன் துவங்கியது
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
24பிப் 2021 07:02
பாலக்காடு: குருவாயூர் கிருஷ்ணர் கோவில் உற்சவம் யானைகள் ஓட்டத்துடன் துவங்கின.
குருவாயூர் கிருஷ்ணர் கோவில் உற்சவம் கொடியேற்றத்துடன் துவங்கியது. கொரோனா தொற்று அச்சுறுத்தலால் வழிகாட்டுதல் நெறிமுறைகளின்படி உற்சவத்தை நடத்த மாவட்ட நிர்வாகம் அனுமதி அளித்திருந்தனர். அதேபோல் முன்னதாக நடத்தும் யானை ஓட்டத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட மூன்று யானைகளை வைத்து மட்டுமே இந்நிகழ்ச்சியை நடத்தக்கூடும் என்று மாவட்ட நிர்வாகம் கற்பித்திருந்தனர். இதையடுத்து நிபந்தனைகளைப் பின்பற்றி கோவில் நிர்வாகம் தேவஸ்தானத்துக்கு சொந்தமான 46 யானைகளில் கோபிகண்ணன், கோபிகிருஷ்ணன், தேவதாஸ் ஆகிய யானைகளை குலுக்கல் முறையில் தேர்வு செய்து நேறு பிற்பகல் 3 மணிக்கு யானையோட்டம் நிகழ்ச்சி நடந்தன. இதில் தெற்குக் கோபுரம் வாசல் வழியாக கோவிலுக்குள் நுழைந்த எட்டு முறை வெற்றிபெற்ற கோபிகண்ணன் மீண்டும் வெற்றிபெற்றதாக அறிவிக்கப்பட்டது.
இதைடுத்து கோபிகண்ணன் யானை ஏழு முறை வலம் வந்து மூலவரை வணங்கி நின்றது. இந்நிகழ்ச்சியில் பங்கேற்ற யானைகளுக்கு யானையூட்டும் (உணவு வழங்குதல்) நிகழ்ச்சி நடந்தன. முன் காலங்களில் இந்நிகழ்ச்சியில் 20க்கும் மேலான யானைகள் கலந்து கொள்வது குறிப்பிடத்தக்கது. இனி வரும் பத்து நாட்கள் நடக்கும் விழாவில் கோபிகண்ணன் யானை மீது அமர்ந்து பவனி வருவார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
யானையோட்டத்தின் ஐதீகம்: கோவிலுக்கு சொந்தமாக 46 யானைகள் இருந்தாலும் உற்சவதிற்க்கு கொடியேறிய நேற்று காலை மூலவர் எழுந்தருள (சீவேலி) நிகழ்ச்சிக்கு யானைகள் கிடையாது. அதற்கு பதிலாக மூலவரின் தங்க சிலை கீழ்சாந்தி, தன் மார்போடு சேர்த்து பிடித்து பவனி வலம் வந்தனர். பல்லாண்டுகளுக்கு முன் திருகண்ணாமதிலகம் கோவிலில் இருந்து இந்நிகழ்ச்சிக்காக யானைகளை ஏற்பாடு செய்திருந்தனர். ஆனால் அக்கோவில் நிர்வாகம் யானைகளை வழங்க மறுப்பு தெரிவித்தனர். அப்படி உற்சவ கொடியேற்ற நாள் காலை யானைகள் அணிவகுப்பில்லாமல் மூலவரை எழுந்தருளிக்க வேண்டிய நிலைமை வந்தது. பிற்பகல் முடிந்ததும் மணியோசைகளுடன் யானைகள் மூலவரை காண கோவில் திருசன் நிதிக்கு ஓடி வந்ததாக ஐதீகம். காலங்கள் பல தாண்டியும் இதை நினைவூட்டி கொடியேற்ற நாள் காலை யானைகளின் அணிவகுப்பில்லா மூலவரின் எழுந்தருளலும் (சீவேலி) பிற்பகலிலுள்ள யானையோட்டவும் இன்னும் நடத்தி வருகின்றது குறிப்பிடத்தக்கது.