காரைக்கால்: நித்யகல்யாணப் பெருமாள் கோயில் பிரம்மோற்சவ விழாவில் நேற்று தேரோட்டம் நடந்தது. காரைக்கால் பாரதியார் சாலையில் உள்ள நித்ய கல்யாண பெருமாள் கோவிலில் பிரம்மோற்சவ விழா கடந்த 16ம் தேதி துவங்கியது. தினமும் பெருமாள் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை மற்றும் சுவாமி வீதியுலா நடைபெற்று வருகிறது. 22ம் தேதி திருக்கல்யாணம். நேற்று முன்தினம் வெண்ணெய்த்தாழி சேவை நடைபெற்றது.முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நேற்று நடந்தது. சந்திரபுஷ்கரணியில் தீர்த்தவாரி, பெருமாள் திருமஞ்சனம் நடைபெற்றது.முக்கிய வீதிகள் வழியாக பெருமாள் வீதி உலா வந்தார். திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.