பதிவு செய்த நாள்
25
பிப்
2021
01:02
திருத்தணி: திருத்தணி முருகன் கோவிலில், பிரம்மோற்சவ விழாவின், ஏழாம் நாளான நேற்று, தேர் திருவிழா நடந்தது.திருத்தணி முருகன் கோவிலில், கடந்த 18ம் தேதி, மாசி மாத பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் துவங்கியது.இதையொட்டி, தினமும், காலை மற்றும் இரவு நேரத்தில், உற்சவர் முருகப் பெருமான் ஒவ்வொரு வாகனத்தில், மாடவீதியில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.பிரம்மோற்சவ விழாவின் ஏழாம் நாளான நேற்று, மாலை, 6:00 மணிக்கு, மரத்தேர் திருவிழா நடந்தது. தேரில் உற்சவர் முருகப் பெருமான் எழுந்தருளினார்.அதை தொடர்ந்து, பக்தர்கள் வடம் பிடித்து, மாடவீதியில் இழுத்து சென்றனர். அப்போது, அங்கு கூடியிருந்த பக்தர்கள் அரோகரா, அரோகரா என பக்தி முழக்கமிட்டனர்.இன்று, நள்ளிரவில் உற்சவர் முருகப் பெருமான் குதிரை வாகனத்தில் உலா வந்து, வள்ளியை மணக்கும் திருக்கல்யாணம் நிகழ்ச்சி நடைபெறும்.