வெள்ளகோவில்: வெள்ளகோவில் அருகே ஸ்ரீ தம்பிக்கலைய சுவாமி கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்று ஓராண்டு நிறைவு பெற்ற நிலையில் முதலாம் ஆண்டு விழா சிறப்பாக நடந்தது.
முரூக்கங்காட்டு வலசு தம்பிக்கலைய சாமி கோவில் கடந்த ஆண்டு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. நேற்று ஓராண்டு நிறைவு பெற்ற நிலையில் முதலாம் ஆண்டு விழா காலை 8 மணியளவில் துவங்கி கணபதி ஹோமம் மற்றும் சிறப்பு யாகங்கள் நடந்தது. தொடர்ந்து கொடுமுடி காவேரி, வீரப்பூர், மடவிளாகம், ராமேஸ்வரம், கன்னியாகுமரி, உட்பட்ட ஊர்களிலிருந்து கொண்டுவரப்பட்ட புண்ணிய தீர்த்தங்கள் சுவாமிக்கு விட்டு 16 திரவியங்கள் அடங்கிய சிறப்பு அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து சிறப்பு அலங்காரம் அபிஷேகம், மகா தீபாராதனை நடந்தது. பிரசாதம் வழங்குதல் தொடர்ந்து மஹா அன்னதானம் நடந்தது. ஆண்டு விழாவிற்கான அனைத்து ஏற்பாடுகளையும் கோவில் குடிப்பாட்டு காரர்கள் சிறப்பாக செய்திருந்தனர்.