Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
சிவாலயத்தில் சிறப்பு பூஜை திருக்கோஷ்டியூரில் இன்று மாசித்தெப்பம்: குவிந்த பக்தர்கள் திருக்கோஷ்டியூரில் இன்று ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பாலாற்றை பாதுகாக்க மார்ச் மாதம்: விழிப்புணர்வு பாதை யாத்திரை
எழுத்தின் அளவு:
பாலாற்றை பாதுகாக்க மார்ச் மாதம்: விழிப்புணர்வு பாதை யாத்திரை

பதிவு செய்த நாள்

26 பிப்
2021
08:02

தஞ்சாவூர், பாலாற்றை பாதுகாக்க மார்ச் மாதத்தில், விழிப்புணர்வு பாதை யாத்திரை நடைபெற உள்ளது என அகில பாரதீய சன்னயாசிகள் சங்க தலைவர் ராமானந்தசுவாமிகள் தெரிவித்தார்.

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில், மாசி மகத்தை முன்னிட்டு, அகில பாரதீய சன்னியாசிகள் சங்கம் மற்றும் தென்பாரத கும்பமேளா அறக்கட்டளையினர் சார்பில், துறவியர் மாநாடு நடந்தது. மாநாட்டுக்கு வந்தவர்களை தென் பாரத கும்பமேளா அறக்கட்டளை தலைவர் சௌமிநாராயணன் வரவேற்றார். மாநாட்டில் செயலாளர் சத்யநாராயணன், அகில பாரதீய சன்னியாசிகள் சங்க ஒருங்கிணைப்பாளர் வேதாந்தனந்தா, பொதுச் செயாலளர் ஆத்மனாந்த சரஸ்வதி சுவாமிகள், மன்னார்குடி செண்டலங்கார செண்பக ராமானுஜ ஜீயர், சென்னை சாது தாம்பரனந்தாசுவாமிகள், சன்னியாசிகள் சங்கத்தின் கேரள மாநிலத் தலைவர் பிரபாகரனந்த சரஸ்வதி சுவாமிகள் உள்ளிட்ட பலர் உரையாற்றினர். மாநாட்டில் நிறைவேற்ற தீர்மானங்கள் குறித்து, அகில பாரதீய சன்னியாசிகள் சங்கத்தின் தலைவர் ராமானந்தா நிருபர்களிடம் கூறியதாவது; இந்து மதத்தை பாதுக்காக இந்துக்கள் அனைவரும் முன் வர வேண்டும்.

இஸ்லாமியர்களுக்கு புனித பயணம் செய்ய 15 ஆயிரம் பேருக்கும், கிறிஸ்தவர்கள் ஜெரூசெலம் செல்ல ஆயிரம் பேருக்கும் தமிழக அரசு அனுமதி வழங்கி, அரசு நிதியை வழங்குகிறது. ஆனால் பெரும்பாண்மையாக உள்ள இந்துக்கள் கையிலாய யாத்திரை செல்ல வெறும் 400 பேருக்கு மட்டும், இந்து சமய அறநிலையத்துறையிலிருந்து நிதி வழங்குகிறது. இதனை உயர்த்தி, அரசு நிதியிலிருந்து வழங்க வேண்டும். தமிழகத்தில் நீர்நிலைகளை பாதுகாக்கவும், கனிம வளங்களை கொள்ளையடிப்பதை தடுக்கவும் தனி அமைச்சகத்தை உருவாக்க வேண்டும். ஏற்கனவே அகில பாரதீய சன்னியாசிகள் சங்கம் சார்பில் காவிரி புஷ்கரம், வைகை, தாமிரபரணி, தென்பெண்ணை நதிகளை பாதுகாக்க புஷ்கர விழாக்கள் நடத்தப்பட்டன் விளைவாக இந்த ஆறுகளில் நீர் பற்றாக்குறை இல்லாமல் இருந்தது. இதேபோல் சாயக்கழிகளால் பாழ்பட்டு வரும் பாலாற்றை பாதுகாக்கும் விதமாக, மார்ச் மாதத்தில் விழிப்புணர்வு பாதயாத்திரை நடத்தி, அங்கு புஷ்கரம் விழா நடத்தப்படும் இவ்வாறு தெரிவித்தார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பதி; திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வைகுண்ட துவாதசியையொட்டி இன்று காலை திருமலையில் ... மேலும்
 
temple news
அயோத்தி: அயோத்தி ராமர் கோவிலில் பிரதிஷ்டா துவாதசி பட்டோற்சவத்தை முன்னிட்டு சிறப்பு ஹோமம் ... மேலும்
 
temple news
ஸ்ரீரங்கம்:  பூலோக வைகுண்டம் என்று அழைக்கப்படும், ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில், 108 திவ்ய தேசங்களில் ... மேலும்
 
temple news
ஒட்டன்சத்திரம்; பழநிக்கு பாதயாத்திரை செல்லும் பக்தர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து ... மேலும்
 
temple news
ராமேஸ்வரம்: ‘‘காசியும், ராமேஸ்வரமும் பிரித்து பார்க்க முடியாத புண்ணிய நகரங்களாக விளங்குகின்றன. இந்திய ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar