குளித்தலை: கடம்பர் கோவில் மாசி மக பெருந்திருவிழா தேரோட்டம் நடந்தது. குளித்தலை, கடம்பவனேஸ்வரர் கோவிலில், மாசி மக பெருந்திருவிழா கடந்த, 17ல் தொடங்கியது. 23 காலை, 10:00 மணியளவில் திருக்கல்யாண நிகழ்ச்சி; தொடர்ந்து ஒவ்வொரு நாளும் இரவு சுவாமி திருவீதி உலா நடந்தது. நேற்று காலை, திருத்தேர் வடம் பிடித்தல் நடந்தது. சுற்று வட்டார பகுதியைச் சேர்ந்த பக்தர்கள், சிவனடியார்கள் கலந்து கொண்டு தேரை இழுத்து வந்தனர். வரும், 2ம் தேதியுடன் முடிவடைகிறது.