திருச்சுழி : திருச்சுழி அருகே கேத்தநாயக்கன்பட்டியில் மாசி பொங்கல் விழா நடந்தது. இதை முன்னிட்டு பிப்.,26 ல் கொடியேற்றம் நடந்தது. அம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.பொங்கல் விழாவை முன்னிட்டு பெண்கள் விரதம் இருந்து பொங்கல் வைத்து அம்மனை வழிபட்டனர்.கடைசி நாளாக நேற்று பெண்கள் குடங்களில் மஞ்சள், பால் கலந்த புனித நீரை அம்மனுக்கு அபிேஷகம் செய்ய ஊர்வலமாக எடுத்து சென்றனர்.