நத்தம் : நத்தம் மாரியம்மன் கோயில் மாசித் திருவிழாவை முன்னிட்டு நாளை பூக்குழி இறங்கும் விழா நடக்கிறது. திருவிழா பிப்.15 ல் கொடியேற்றத்துடன் துவங்கி நடந்து வருகிறது. கன்னிமார் தீர்த்தம் எடுத்து வந்து பக்தர்கள் காப்புக்கட்டி விரதம் துவங்கினர். தினமும் அம்மன் வீதியுலா நடக்கிறது. இன்று (மார்ச் 1) பக்தர்கள் அரண்மனை பொங்கல் வைத்தல், கரும்பு தொட்டில் எடுத்தல் உள்ளிட்ட நிகழ்ச்சி நடக்கிறது.நாளை (மார்ச் 2) பக்தர்கள் அக்னிச்சட்டி எடுத்து வந்து நேர்த்திக் கடன் செலுத்துவர். பகலில் கழுமர ஏற்றம் நடைபெறும். இதைத் தொடர்ந்து விழாவின் முக்கிய நிகழ்வாக பக்தர்கள் பூக்குழி இறங்கும் நிகழ்ச்சி, நாளை மறுநாள் (மார்ச் 3) மஞ்சள் நீராட்டு விழா நடக்கிறது.