பழநி : பழநியில் கொளுத்தும் வெயிலால் பொதுமக்கள், பக்தர்கள் மிகவும் அவதிப்பட்டனர். பழநியில் மாரியம்மன் கோயில் மாசித்திருவிழா நடந்து வருகிறது. இதையொட்டி பக்தர்கள் தீச்சட்டி, தீர்த்த குடம் எடுத்து வருகின்றனர். வழக்கத்தை விட வெயில் கொளுத்துகிறது. அனல் காற்று வீசுவதாலும், வெயில் வாட்டி வதைப்பதாலும் பகல் நேரங்களில் மக்கள் மிகவும் அவதிப்படுகின்றனர். சிலர் குடைகளை பிடித்தபடி நடந்து சென்றனர். வெயிலின் தாக்கத்தை தணிக்க குளிர்பான கடைகளில் மக்கள் கூட்டம் அலைமோதின.