பதிவு செய்த நாள்
01
மார்
2021
07:03
ஈரோடு: ஈரோடு, கருங்கல்பாளையம் காவிரியாற்றில், குடிநீருக்காக திறக்கப்பட்ட தண்ணீர் ஓடை போல் ஓடிக் கொண்டிருக்கிறது. தண்ணீர் வற்றிய இடங்களில் சகதி நிறைந்துள்ளது. தற்போது, ஈரோட்டை சுற்றியுள்ள கிராம கோவில்களில், திருவிழா நடந்து வருகிறது. இதற்கு தீர்த்தம் எடுக்க, பக்தர்கள் ஆற்றுக்கு வருகின்றனர். இரவு, அதிகாலை நேரத்தில் வருவோர், சகதி நிறைந்த இடத்தில், எச்சரிக்கையாக இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், இப்பகுதியில் ஏற்கனவே இருந்த பழைய குடியிருப்புகளின் செப்டிக் டேங்க் குழிகள், சகதியால் நிறைந்துள்ளது. எனவே, பக்தர்கள் எச்சரிக்கையாக இருக்க, பொதுப்பணித்துறை ஊழியர்கள், அறிவுறுத்தியுள்ளனர்.இதுகுறித்து அப்பகுதியில் உள்ள சலவை தொழிலாளர்களிடமும், பக்தர்களுக்கு அறிவுறுத்துங்கள் என்று, வேண்டுகோள் விடுத்துள்ளனர்.