நெருங்கிய உறவினர் கடன் கொடுக்கும் போது பத்திரங்களில் கையெழுத்து வாங்குவர். ‘‘என்னப்பா இது! இப்படி நம்பாத மனுஷனா இருக்கிறாரே’ என மனதிற்குள் கோபம் வரலாம். ஆனால் கடன் வாங்கும் போது பத்திரத்தில் கையெழுத்திட வேண்டும் என குர்ஆன் கட்டளையிடுகிறது. ‘என் மீது நக்கையில்லையா’ என யாரும் கேள்வி கூடாது. கடன் கொடுப்போர் அடமானமாக பொருளை பெறவும் வழிகாட்டுகிறது. யூதர் ஒருவரிடம் கடன் வாங்கிய போது தனது கவச ஆடையை அடமானமாக கொடுத்தார் நாயகம். எனவே கடன் கொடுத்தாலும், வாங்கினாலும் அதற்குரிய ஒப்பந்தம் சரிவர இருக்க வேண்டும்.