மகாமக குளத்தில் நீராட வேண்டுமென்ற அவசியமில்லை. அதை ஒருமுறை சுற்றி வந்தாலே பாற்கடலைக் கடையும் போது, மத்தாக இருந்த மேருமலையை நுாறு தடவை சுற்றிய புண்ணியம் கிடைக்கும். இரண்டு முறை சுற்றினால் சிவலோகத்தை வலம் வந்த பலனும், மூன்று தடவை சுற்றினால் பிறப்பு என்பதே இல்லாத முக்திநிலையும் உண்டாகும். மகாமக குளத்தில் நீராடினால் பிரம்மஹத்தி தோஷம் என்னும் கொலை பாவம், கோயில் சொத்தை கொள்ளையடித்தது, குடித்து விட்டு புரிந்த பாவங்கள், விஷ்ணு, சிவ துரோகம், திருட்டு பாவம், பெண்களுக்கு தீங்கிழைத்தது, மனதில் தோன்றிய தீய எண்ணம், தம்பதியை பிரித்த பாவம், கூட்டுக் குடும்பத்தை சிதைத்த பாவம் ஆகிய கொடிய பாவங்களுக்கு பிராயச்சித்தம் கிடைக்கும்.