சிவபெருமான் ஒருமுறை எமதர்மனுக்கு நிறைய வேலை கொடுத்து விட்டார். உலகத்திலுள்ள எல்லா ஜீவராசிகளின் உயிரையும் பறித்து விட்டு, எமனும் இறந்து விட வேண்டும் என கட்டளையிட்டார். அதன்படி உலகம் தண்ணீரால் அழிந்தது. எல்லா உயிர்களையும் அழித்த எமனும் இறந்தான். பின் புதிய உலகத்தை படைத்த போது சமதர்மத்தின் அதிபதியான எமன் மீண்டும் பிறந்தான். உலகம் அழிந்த அந்த நாளே மாசி மகம்.