மணிமுக்தாற்றில் குவிந்த குப்பைகளால் சுகாதார சீர்கேடு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
02மார் 2021 06:03
விருத்தாசலம்; விருத்தாசலத்தில் மாசிமக உற்சவம் நிறைவடைந்ததால், மணிமுக்தாற்றை துாய்மைப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோவில் மாசி மக பிரம்மோற்சவத்தின் முக்கிய நிகழ்வாக, மணிமுக்தாற்றில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பது வழக்கம்.
பவுர்ணமி நாளான நேற்றும் மணிமுக்தாற்றில் ஏராளமானோர் திதி கொடுத்தனர்.திதி கொடுத்தவர்கள் இலைகள், பிளாஸ்டிக் பைகள், துணிகள் உள்ளிட்ட பொருட்களை அப்படியே ஆற்றில் வீசிச் சென்றனர். இதனால் மணிமுக்தாற்றில் மாசிமக உற்சவம் நிறைவடைந்த நிலையில், பல டன் குப்பைகள் தேங்கிக் கிடக்கின்றன.சமீபத்தில் நிவர், புரெவி புயல்களால் பெய்த தொடர் மழையால் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியபோது, மணிமுக்தாற்றின் மேம்பாலத்தின் கீழ் பகுதியில் பிளாஸ்டிக் கழிவுகள் குவிந்து கிடக்கின்றன. தற்போது, திதி கொடுத்த கழிவுகளும் சேர்ந்ததால், மணிமுக்தாறு சுகாதார சீர்கேடாக மாறியுள்ளது. எனவே, மணிமுக்தாற்றில் குவிந்து கிடக்கும் கழிவுகளை அப்புறப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.