Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news நித்யகல்யாண பெருமாளுக்கு ... ஆதிகேசவப் பெருமாள் கோவிலில் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் ஆதிகேசவப் பெருமாள் கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருவெண்காடு புதன் ஸ்தலத்தில் தேரோட்டம் கோலாகலம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
திருவெண்காடு புதன் ஸ்தலத்தில் தேரோட்டம் கோலாகலம்

பதிவு செய்த நாள்

04 மார்
2021
09:03

மயிலாடுதுறை : திருவெண்காடு புதன் ஸ்தலத்தில் இந்திர பெருவிழாவை முன்னிட்டு தேரோட்ட திருவிழா வெகு விமர்சியாக நடைபெற்றது. திரளான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்து வழிபாடு செய்தனர்.

மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி அருகே திருவெண்காட்டில் பிரம்ம வித்யாம்பிகை சமேத சுவேதாரண்யேஸ்வரா் கோயில் அமைந்துள்ளது. இக்கோயில் காசிக்கு இணையான 6 கோயில்களில் முதன்மையான திருக்கோயிலாகவும், சிவனின் ஐந்து முகங்களில் ஒன்றான அகோரமுகம் கொண்டு இங்கு சிவன் அகோரமூா்த்தியாக  தனி சன்னிதியில் அருள்பாலித்து வருவது சிறப்புக்குரியதாகும். மேலும், நவ கிரக தலங்களில் கல்வி, தொழில் ஆகியவற்றின் அதிபதியான புதன் பகவானுக்குரிய தலமாகவும் இக்கோவில் விளங்குகிறது.

இத்தகைய சிறப்புகளைக் கொண்ட இக்கோயிலில் ஆண்டுதோறும் நடைபெறும் இந்திர பெருவிழா, கடந்த மாதம் 23ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து விழாவின் முக்கிய நிகழ்வான 9 ஆம் நாள் தேர் திருவிழா இன்று வெகு விமர்சையாக நடைபெற்றது. தேரோட்டத்தை முன்னிட்டு விநாயகர், முருகர், பிரம்ம வித்யாம்பிகை உடனான ஸ்வேதாரண்யேஸ்வரர் உள்ளிட்ட சுவாமிகள் மூன்று தேரில் எழுந்தருளினர். தொடர்ந்து சுவாமிகளுக்கு சிறப்பு தீபாராதனை நடைபெற்று மூன்று தேர்களையும் திரளான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்து  நான்கு வீதிகளையும் வலம் வந்தனர். இதில் சுற்றுவட்டார பகுதிகளிலிருந்து திரளான பக்தா்கள் கலந்துகொண்டு வழிபாடு செய்தனர். வருகின்ற  மார்ச் 6 ம் தேதி தெப்பத்திருவிழா நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
தஞ்சாவூர்: தஞ்சை பெரியகோவிலில் இன்று நடைபெற்ற ஐப்பசி பிரதோஷ வழிபாட்டில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் ... மேலும்
 
temple news
மஹாராஷ்டிராவில் விஜய யாத்திரை மேற்கொண்ட சிருங்கேரி ஸ்ரீசாரதா பீட ஜகத்குரு ஸ்ரீவிதுசேகர பாரதீ ... மேலும்
 
temple news
பாலக்காடு: குருவாயூர் கிருஷ்ணர் கோவிலில், 15 நாட்களுக்கு நடக்கும், செம்பை சங்கீத உற்சவம் இன்று ... மேலும்
 
temple news
திருநெல்வேலி: தமிழகத்தில் பிரசித்தி பெற்ற சிவாலயங்களில் ஒன்றான திருநெல்வேலி நெல்லையப்பர் கோவிலில் ... மேலும்
 
temple news
தென்காசி: தென்காசி காசி விஸ்வநாதர் கோயிலில் ஐப்பசி திருக்கல்யாண விழா, மங்கல இசை, பஞ்ச வாத்தியங்கள், ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar