திண்டிவனம்: தீவனூர் பெருமாள் கோவில் தேரோட்டம் நடந்தது. விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த தீவனூர் ஆதி நாராயணப் பெருமாள் என்கிற லக்ஷ்மி நாராயணப் பெருமாள் கோவில் பிரம்மோற்சவ விழா கடந்த 26 ம் தேதி துவங்கியது. தொடர்ந்து தினந்தோறும் இரவு பல்வேறு வாகனங்களில் சுவாமி வீதியுலா நடந்தது. கடந்த 2ம் தேதி இரவு திருக்கல்யாண உற்சவம் நடந்தது. நேற்று காலை 10 மணிக்கு தேரோட்டம் நடந்தது. ஏராளமான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர். விழா ஏற்பாடுகளை தர்மகர்த்தா முனுசாமி மற்றும் பக்தர்கள் செய்திருந்தனர்.