செஞ்சி: நாட்டார் மங்கலத்தில் அய்யனாரப்பன் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது. செஞ்சி தாலுகா நாட்டார் மங்கலத்தில் பூரணி பொற்கலை சமேத அய்யனாரப்பன், வலம்புரிகணபதி, வீரன், நவக்கிரகம், நாகம்மாள் சன்னதிகள் மற்றும் பரிவார தேவதைகளுக்கு நேற்று காலை கும்பாபிஷே கம் நடந்தது. அய்யனாரப்பன் சிலை 21 அடி உயரம் அமைக்கப்பட்டிருந்தது. கும்பாபிஷேகத்தை முன்னிட்டு மகா தீபாராதனை நடந்தது. பக்தர்களுக்கு அன் னதானமும் வழங்கப்பட்டது. இதில் கிராம மக்கள் திரளாக பங்கேற்றனர்.