பதிவு செய்த நாள்
06
மார்
2021
05:03
மாமல்லபுரம் : கடம்பாடி, மாரி சின்னம்மன் கோவிலில், வரும், 12ம் தேதி, தெப்போற்சவம் நடக்கிறது. செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லபுரம் அடுத்த, கடம்பாடியில், தமிழக ஹிந்து சமய அறநிலையத் துறையின், மாரி சின்னம்மன் கோவில் உள்ளது. செங்கல்பட்டு, காஞ்சிபுரம், சென்னை பக்தர்களிடம், பிரசித்தி பெற்றது.இக்கோவிலில், மாசி மாதம், இறுதி வெள்ளிக்கிழமை, தெப்ப உற்சவம் நடைபெறும். தற்போது, வரும், 12ம் தேதி, உற்சவம் நடக்கிறது. அன்று காலை, அம்மனுக்கு அபிஷேகம் செய்து, இரவு, அலங்கார தெப்பத்தில், அம்மன் உற்சவம் காண்கிறார். உற்சவம் காண வரும் பக்தர்களுக்கு, குடிநீர், சுகாதாரம், மருத்துவம், அரசு பஸ் இயக்கம், போலீஸ் பாதுகாப்பு உள்ளிட்ட ஏற்பாடுகளுக்கு, முக்கிய துறையினருக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது.