பதிவு செய்த நாள்
06
மார்
2021
05:03
தர்மபுரி: தர்மபுரி அடுத்த, அய்யம்பட்டியில் உள்ள மாரியம்மன் கோவில் கும்பாபி?ஷக விழா கோலாகலமாக நடந்தது. தர்மபுரி, அய்யம்பட்டி மாரியம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு, கடந்த, 25 காலை, 9:00 மணிக்கு முகூர்த்த கால்கோள், கங்கணம் கட்டும் நிகழ்ச்சி நடந்தது. நேற்று முன்தினம் மாலை, 5:30 மணிக்கு மேல், விக்னேஷ்வரர் பூஜை, வாஸ்து சாந்தி, யாகசாலை பிரவேசம், முதற்கால ?ஹாமம் மற்றும் மஹா தீபாராதனை நடந்தது. நேற்று காலை, 6:00 மணிக்கு விக்னேஸ்வர பூஜை, இரண்டாம் கால ?ஹாமம், மஹாபூர்ணாஹூதி நடந்தது. 8:00 மணிக்கு பரிவார தெய்வங்கள் மற்றும் தேசத்து மாரியம்மன் கோவில் கும்பாபி?ஷக விழா நடந்தது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.