கன்னிவாடி: தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு கன்னிவாடி சோமலிங்கசுவாமி கோயிலில், சிறப்பு பூஜை நடந்தது. திரவிய அபிஷேகத்துடன், சிறப்பு மலர் அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது. அஷ்டோத்திர பூஜையுடன், மகா தீபாராதனை நடந்தது.சின்னாளபட்டி சதுர்முக முருகன் கோயில், அஞ்சலி வரத ஆஞ்சநேயர் கோயில், சித்தையன்கோட்டை காசி விஸ்வநாதர் கோயில், கசவனம்பட்டி மவுனகுரு சுவாமி கோயிலிலும் சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடந்தது.