புதுச்சேரி : சிவன்படைபேட்டை அங்காளம்மன் கோவில் மயானக் கொள்ளை உற்சவம் வரும் 13ம் தேதி நடக்கிறது. நெட்டப்பாக்கம் சிவன்படைபேட்டையில் சுந்தரவிநாயகர், அங்காளம்மன், பாவாடைராயன் கோவில் கோவிலில் மயானக் கொள்ளை பிரம்மோற்சவம் கடந்த 4ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது.இதையொட்டி, தினமும் காலையில் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் மற்றும் இரவு வீதியுலா நடக்கிறது. வரும் 12ம் தேதி இரவு 7 மணிக்கு மகா சிவராத்திரி, வள்ளாள கண்டன் கோட்டை அழித்தல்,பின், 13ம் தேதி மதியம் 1 மணிக்கு மயானக்கொள்ளை உற்சவம் நடக்கிறது.