பரமக்குடி சாத்தாயி அம்மன் கோயிலில் பூச்சொரிதல் விழா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
08மார் 2021 09:03
பரமக்குடி: பரமக்குடி வைகை ஆற்றங்கரையில் அருள்பாலிக்கும் சாத்தாயி அம்மன் கோயிலில் பூச்சொரிதல் விழா நடந்தது. இதன்படி மூலவர் மற்றும் உற்சவர் அம்மனுக்கு காலையில் பால், பன்னீர், இளநீர், பஞ்சாமிருதம் உள்ளிட்ட பல வகையான அபிஷேகங்கள் நடத்தப்பட்டன. பின்னர் தீபாராதனை காண்பிக்கப்பட்டது. தொடர்ந்து மாலை 6 மணிக்கு உற்சவர் மற்றும் மூலவர் அம்மனுக்கு பல்வேறு வண்ண மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு பூச்சொரிதல் விழா நடந்தது. இரவு சிறப்பு தீபாராதனைக்குப் பின் பக்தர்களுக்கு பிரசாதமாக பூக்கள் வழங்கப்பட்டது. ஏராளமான பெண்கள் அம்மனை வழிபட்டு சென்றனர்.