பல்லடம்: பல்லடம் அருகே, பூசணிக்காய் தீபம் ஏற்றி வைத்து, பக்தர்கள் தேய்பிறை அஷ்டமி வழிபாடு செய்தனர். ஒவ்வொரு மாதமும் அமாவாசைக்கு முன்பாக வரும் அஷ்டமி பைரவருக்கு உகந்ததாகும். அந்நாளில் பைரவரை வழிபட்டால் கஷ்டங்கள் விலகும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.
பல்லடம் அடுத்த மலையம்பாளையம் பிரிவில் வடுகநாத சுவாமி கோவிலில் ஒவ்வொரு மாதமும் தேய்பிறை அஷ்டமி வழிபாடு சிறப்பாக கொண்டாடப்படுகிறது. மாசி மாத அஷ்டமி வழிபாடு நேற்று முன்தினம் நடந்தது. அதை முன்னிட்டு பக்தர்கள் பூசணிக்காய் தீபம் ஏற்றி வைத்து பைரவரை வழிபட்டனர். சிறப்பு அலங்காரத்தில் மூலவர் வடுகநாத சுவாமி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். அனைவருக்கும் கோவில் கமிட்டி சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது.