பரனூர் சத்திரம் திரவுபதி அம்மன் திருக்கல்யாண வைபவம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
09மார் 2021 11:03
திருக்கோவிலூர்: திருக்கோவிலூர் அடுத்த பரனூர் சத்திரம் திரவுபதி அம்மன் கோவில் பிரம்மோற்சவ விழாவில் திரௌபதி சமேத அர்ஜுனன் திருக்கல்யாண வைபவம் நடந்தது.
திருக்கோவிலூர் அடுத்த பரனூர் சத்திரம் திரவுபதி அம்மன் கோவில் தீமிதி விழா கடந்த 4ம் தேதி துவங்கியது விழாவின் ஐந்தாம் நாளான நேற்று மாலை 5:30 மணிக்கு வசந்த மண்டபத்தில் வேத மந்திரங்கள் முழங்க திரவுபதி சமேத அர்ஜுனன் திருக்கல்யாண வைபவம் நடந்தது. இரவு சுவாமி சிறப்பு அலங்காரத்துடன் வீதி உலா நடந்தது. வரும் 11ம் தேதி கரகம், 12ம் தேதி மாலை தேர், தீமிதி விழா நடக்கிறது. இதில் வேண்டுதல் உள்ள பக்தர்கள் தீமிதித்து நேர்த்திக்கடன் செலுத்துவார்கள். விழாவிற்கான ஏற்பாடுகளை இந்து சமய அறநிலைத்துறை, கோவில் நிர்வாகத்தினர் மற்றும் பக்தர்கள் செய்து வருகின்றனர்.