முக்தீஸ்வரர் கோயிலில் மார்ச் 11 முதல் சூரிய ஒளி பிரவேசம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
09மார் 2021 11:03
மதுரை : மதுரை தெப்பக்குளம் முக்தீஸ்வரர் கோயிலில் மார்ச் 11 முதல் 23 வரை சுவாமி மீது சூரிய ஒளி பிரவேசிக்கும் நிகழ்வு நடக்கிறது. தினமும் காலை 6:35 மணி முதல் 6:45 மணி வரை, காலை 7:00 மணி முதல் 7:10 மணி வரை நடக்கும் இந்நிகழ்வின்போது சுவாமிக்கு அபிேஷக, ஆராதனை நடக்கும். இந்நாட்களில் காலை காலை 7:20 மணிக்கு பிறகு பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவர்.
சிவராத்திரிக்கு கட்டுப்பாடு: மீனாட்சி அம்மன் கோயில் மற்றும் உபகோயில்களில் மார்ச் 11 இரவு முதல் மறுநாள் அதிகாலை வரை மகா சிவராத்திரி அபிேஷக, ஆராதனை நடைபெறும்.கொரோனா காரணமாக அச்சமயத்தில் சுவாமி சன்னதி அர்த்த மண்டபத்தில் அபிேஷக நேரத்தில் அமர்வு தரிசனம்ரத்து செய்யப்பட்டுஉள்ளது. பக்தர்கள் வரிசையில் நின்று தரிசனம் செய்ய வேண்டும் என கோயில் நிர்வாக அதிகாரி செல்லத்துரை தெரிவித்துள்ளார்.