பதிவு செய்த நாள்
05
ஜூன்
2012
11:06
மஞ்சூர்: கோரகுந்தா மாதேஸ்வரர் கோவிலில் மகா கும்பாபிஷேகம் கோலாகலமாக நடந்தது. மஞ்சூர் அருகே கோரகுந்தா எஸ்டேட்டில் ஒரு கோடி ரூபாய் மதிப்பீட்டில் உமா தேவி ஸ்மேத மாதேஸ்வரர் கோவில் திருப்பணிகள் கடந்த ஓராண்டு காலமாக நடந்து வந்தது. கோவில் திருப்பணிகள் முடிந்த நிலையில் மகா கும்பாபிஷேகம் நடத்த கோவில் நிர்வாகம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டது. அதன்படி நேற்று முன்தினம் மாலை 6 மணிக்கு விக்னேஷ்வர பூஜையுடன் கோவில் கும்பாபிஷேகம் விழா தொடங்கியது. அன்று காலை 6.20 மணிக்கு புண்யாக வாசனம், ஸ்தல சுத்தி, தேவதா பிரார்த்தனை, காலை 8 மணிக்கு கணபதி ஹோமம், நவகிரக ஹோமம், பரவேஸ்பலி, ரக்÷ஷாகண ஹோமம், முதல் கால யாக பூஜைகள் நடந்தது. தொடர்ந்து இரண்டாம் கால பூஜை, யாகம் பூர்ணாஹூதி, விசேஷ பிரார்த்தனை, பிரசாத வினியோகம் நடந்தது. இதையடுத்து மகா கும்பாபிஷேகம், மூலவர் அபிஷேகம், மகா தீபாராதனையை தொடர்ந்து, கோபுர கலசங்கள் மீது புனித நீர் ஊற்றப்பட்டது. தொடர்ந்து, ஆதிவாசிகளின் நடன நிகழ்ச்சி, பக்தி பாடல்கள் நிகழ்ச்சி நடந்தது. இவ்விழாவில் சாம்ராஜ், கோரகுந்தா குரூப் இயக்குனர் ஹெக்டே தலைமை தாங்கினார். குரூப் சேர்மன் மல்லிகா சீனிவாசன் முன்னிலை வகித்தார். ஊட்டி எம்.எல்.ஏ., புத்திசந்திரன், இளைஞர் பாசறை மாவட்ட தலைவர் வினோத்குமார், மாவட்ட ஊராட்சி மன்ற துணை தலைவர் பலராமன் மற்றும் தொழிற்சாலை அலுவலர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.