சிறந்த சிவபக்தரான அப்பூதியடிகள், திருநாவுக்கரசரை பின்பற்றி, சிவத்தொண்டு செய்து வந்தார். வீடு தேடி வந்த திருநாவுக்கரசருக்கு விருந்து படைத்தார். முன்னதாக, விருந்து படைக்க, வாழை இலை அறுக்கச் சென்ற, அவரது மூத்த மகன் பாம்பு கடித்து இறந்தார். நிலையை உணர்ந்த திருநாவுக்கரசர், சிவபெருமானிடம் வேண்டி, மீண்டும் உயிர்ப்பித்தாக புராணங்களில் கூறப்பட்டுள்ளது. அத்தகைய சிவத்தொண்டரான அப்பூதியடிகள் குருபூஜை, நேற்று சிவாலயங்களில் நடந்தது. அர்த்தசாம பூஜை அடியார் திருக்கூட்டம் சார்பில், திருப்பூர் ஸ்ரீவிஸ்வேஸ்வரர் கோவிலில், அப்பூதியடிகள் குருபூஜை நேற்று நடந்தது. அபிஷேக, அலங்காரபூஜை செய்விக்கப்பட்டது. பெரியபுராணம், திருவாசக பாடல்களை, சிவனடியார்கள் பாராயணம் செய்தனர்.