அன்னூர்: வடுகபாளையம், சவுடேஸ்வரி அம்மன் கோவிலில், மகாசிவராத்திரி விழா வரும், 11ம் தேதி நடக்கிறது.
பச்சாபாளையம் அருகே உள்ள வடுக பாளையத்தில் பிரசித்திபெற்ற ராமலிங்க சவுடேஸ்வரி அம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் வருகிற, 11ம் தேதி மாலை கொலு வைத்தலும், இரவு மகாமுனி அய்யன்களுக்கு படையல் வைத்து பூஜை செய்தலும், விநாயகர் கோவிலில் இருந்து தீர்த்தம் கொண்டு வருதலும், இரவு வீரமாத்தி அம்மனை அழைத்து வருதலும் நடக்கிறது. 12ம் தேதி அதிகாலையில் பள்ளய பூஜையும், அபிஷேக, அலங்கார பூஜையும், பொங்கல் வைத்தலும் நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை கப்பேலார் குலத்தினர் செய்து வருகின்றனர். இங்கு ஒவ்வொரு வாரமும் செவ்வாயன்று முருகர் சப்பரத்தில் வந்து அருள்வாக்கு கூறும் நிகழ்ச்சி நடக்கிறது.