கருமத்தம்பட்டி:ராமாச்சியம்பாளையம் மாகாளியம்மன் கோவிலில், திருக்கல்யாண உற்சவ விழா நாளை நடக்கிறது.சோமனுார் அடுத்த ராமாச்சியம்பாளையம் மாகாளியம்மன் கோவில் பழமையானது. இங்கு, கடந்த, 23ம் தேதி பூச்சாட்டுதலுடன் கல்யாண உற்சவ திருவிழா துவங்கியது. அம்மனுக்கு தினமும் அபிஷேக, அலங்கார பூஜைகள் நடந்தன. தினமும் பக்தர்கள் பூவோடு எடுத்து கம்பம் சுற்றி ஆடினர்.நேற்று விநாயகர் மற்றும் கருப்பராயன் பொங்கல் வைத்து பெண்கள் பூஜித்தனர். நாளை அதிகாலை அம்மனுக்கு திருக்கல்யாணம் மற்றும் அம்மை அழைத்தல் நடக்கிறது. பெண்கள் மாவிளக்கு எடுத்தும், பொங்கல் வைத்தும் அம்மன் வழிபாடு நடக்கிறது. விழா ஏற்பாடுகளை, ஊர் மக்கள் செய்துள்ளனர்.