பதிவு செய்த நாள்
09
மார்
2021
05:03
நாமக்கல்: நாமக்கல்லில் இருந்து, சமயபுரத்துக்கு பல்வேறு மலர்கள் கொண்டு செல்லும் நிகழ்ச்சி நடந்தது. திருச்சி மாவட்டம், சமயபுரம், மாரியம்மன் கோவிலில், அடுத்த மாதம் திருவிழா நடைபெறுகிறது. அதை முன்னிட்டு, பூச்சொரிதல் நிகழ்ச்சியுடன் திருவிழா துவங்குகிறது. அதற்காக, நாமக்கல்லில் இருந்து பல்வேறு மலர்கள் கொண்டு செல்லப்படுகிறது. இந்நிலையில் இரண்டாம் ஆண்டாக நேற்று நாமக்கல் கோட்டை சாலை, நண்பர்கள் குழு சார்பில் அதன் தலைவர் செந்தில் தலைமையில், அலங்கரிக்கப்பட்ட அம்மன் சிலையுடன், 2 டன் மலர்கள் சிறப்பு ரதம் மூலம் எடுத்து செல்லப்பட்டது. பலபட்டரை மாரியம்மன் கோவிலில் இருந்து, துவங்கிய பயணம் பொம்மசமுத்திரம் அக்ரஹாரம் வழியாக, சமயபுரம் சென்றடைந்தது. ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.