‘‘தன் பாவங்களை மறைக்கிறவன் வாழ்வு பெற மாட்டான். அவைகளை ஆண்டவரிடம் அறிக்கை செய்பவனோ இரக்கம் பெறுவான்’’ பாவம் செய்யும் மனிதனை நல்வழிப்படுத்தவே ஆண்டவர் சோதனைகளை ஏற்படுத்துகிறார். இதனால் அதிர்ச்சிக்கு ஆளாகும் மனிதன் மனம் திருந்தி, ‘‘ஆண்டவரே! நான் செய்தது தவறு தான். இனி பாவச் செயல்களில் ஈடுபட மாட்டேன். எதிர்காலத்தில் உம்மை மகிழ்ச்சிப்படுத்தும் வகையில் என் செயல்பாடு அமையும். நான் கடன் வாங்கி விட்டு திரும்பத் தராமல் ஒருவரை ஏமாற்றி விட்டேனே... என் மனைவியை அவளது பெற்றோரிடம் பணம் கொண்டு வரும்படி வீட்டை விட்டு விரட்டினேனே... என் குழந்தைகளுக்கு கல்வியளிக்க தேவையான உழைப்பில் ஈடுபடாமல் வீணாக காலம் கழித்தேனே...’’ என செய்த பாவங்களைச் சொல்லி அழ வேண்டும். அந்தக் கண்ணீரே பாவத்தைக் கரைக்கும் மருந்து.