மனிதன் கத்தியால் குத்தப்பட்டாலும், அரிவாளால் வெட்டப்பட்டாலும் கூட மருத்துவ சிகிச்சை மூலம் குணமாகி விடலாம். ஆனால் அகங்காரம் கொண்டவனுக்கு அழிவு உறுதி என்கிறது பைபிள். அதுபோல முன்னேற்றத்தின் உச்சியில் இருக்கும் ஒருவன், எல்லாம் தன்னால் தான் நடந்தது என்று தம்பட்டம் அடித்துக் கொண்டால், எந்தளவுக்கு உச்சிக்கு போனானோ அந்தளவுக்கு பாதாளத்திற்கு போய் விடுவான். ‘‘அழிவுக்கு முன்னால் அகந்தை. விழுவதற்கு முன்னால் தற்செருக்கு’’ என்பது அனைவருக்கும் பொருந்தக்கூடிய ஒன்று.