சித்தானந்த சுவாமி கோவிலில் இன்று மகா சிவராத்திரி விழா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
11மார் 2021 11:03
புதுச்சேரி; கருவடிக்குப்பம் குரு சித்தானந்த சுவாமி கோவிலில், மகா சிவராத்திரி விழா இன்று (11ம் தேதி) நடக்கிறது.அதையொட்டி, மாலை 6:00 மணி முதல் 7:00 மணி வரை முதல் கால பூஜை, இரவு 10:00 மணி முதல் 11:00 மணி வரை இரண்டாம் கால பூஜை நடக்கிறது.நள்ளிரவு 1:00 மணி முதல் 2:00 மணி வரை மூன்றாம் கால பூஜை, மறுநாள் (12ம் தேதி) காலை 5:00 மணி முதல் 6:00 மணி வரை நான்காம் கால பூஜை நடக்கிறது.சிவராத்திரி விழா ஏற்பாடுகளை, கோவில் சிறப்பு அதிகாரி கிருஷ்ணமூர்த்தி மணிகண்டன், தேவசேனாதிபதி குருக்கள் செய்து வருகின்றனர்.சிவராத்திரியை முன்னிட்டு, தேவஸ்தான கலையரங்கில் நேற்று துவங்கிய நாட்டியாஞ்சலி, வரும் 14ம் தேதி வரை நடக்கிறது.