உத்தரகோசமங்கை: உத்தரகோசமங்கை மங்களநாத சுவாமி கோயிலில் மாசி மாத பிரதோஷத்தை முன்னிட்டு மாலை 4:30 முதல் 6 மணி வரை சிறப்பு பூஜைகள் நடந்தது. மூலவர் மங்களநாத சுவாமி, பிரதோஷ நந்திக்கு பால், தயிர், பன்னீர், இளநீர், மஞ்சள் பொடி உள்ளிட்ட 18 வகையான அபிஷேக ஆராதனைகள் நிறைவேற்றப்பட்டது. பக்தர்கள் பிரதோஷ பாடல்களை பாடினர். கைலாய வாத்தியம் இசைக்கப்பட்டது.
சாயல்குடி அருகே மாரியூர் பூவேந்திய நாதர் சமேத பவளநிறவல்லி அம்மன் கோயிலில் பிரதோஷத்தை சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்தது.. சாயல்குடி கைலாசநாதர் சமேத மீனாட்சி அம்மன் கோயிலில் பிரதோஷத்தை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடந்தது. கீழக்கரை மீனாட்சி சொக்கநாதர் கோயிலில் பிரதோஷத்தை முன்னிட்டு அபிஷேக ஆராதனைகளும் உள்பிரகாரம் வீதி உலாவும் நடந்தது. ரெகுநாதபுரம் வல்லபை ஐயப்பன் கோயிலில் சிவலிங்கத்திற்கு பிரதோஷத்தை முன்னிட்டு அபிஷேக ஆராதனைகள், நாமாவளி, அர்ச்சனை நடந்தது.