பதிவு செய்த நாள்
12
மார்
2021
06:03
உத்தரகோசமங்கை: உத்தரகோசமங்கை மங்களநாத சுவாமி சமேத மங்களேஸ்வரி அம்மன் கோயிலில் சிவராத்திரியை முன்னிட்டு நாட்டியாஞ்சலி நடந்தது.
மூலவர் மங்களநாதருக்கு இரவு 10, 12 மணி, அதிகாலை 2 மற்றும் 4 மணி ஆகிய நேரங்களில் நான்கு கால பூஜை நடந்தது. பால், பன்னீர், இளநீர், திரவியப்பொடி உள்ளிட்ட 18 வகையான அபிஷேக ஆராதனை ஒவ்வொரு காலமுறை பூஜைகளும் நடந்தது. மங்களேசுவரி அம்மனின் திருக்கல்யாண மண்டபத்தில் நாட்டியாஞ்சலி நடந்தது. இரவு 7 மணிக்கு துவங்கியது மறுநாள் காலை 6 மணி வரை நடந்தது. இதில் பரதநாட்டியம், குச்சிபுடி, ஆன்மீக சொற்பொழிவுகள், இசைக்கலைஞர்களின் இன்னிசை நிகழ்ச்சிகள் நடந்தது. நடிகை குட்டி பத்மினி, சின்னத்திரை நடிகை சோனா, சென்னை தமிழ் சங்க தலைவர் இளங்கோவன், மத்திய திரைப்பட தணிக்கை குழு உறுப்பினர் ஜெயக்குமார், ராமநாதபுரம் சமஸ்தான அறங்காவலர் ராணி ராஜேஸ்வரி நாச்சியார், பரத்வாஜ், மன்னர் குமரன் சேதுபதி உள்ளிட்ட பிரமுகர்கள் சிறப்பு விருந்தினராக பங்கேற்றனர். தமிழ்நாடு கலை பண்பாட்டு துறை ஆலோசகர் நடனமாமணி பூரண புஷ்கலா, ராமநாதபுரம் சமஸ்தான திவான் பழனிவேல் பாண்டியன் உள்ளிட்டோர் ஏற்பாடுகளை செய்து இருந்தனர்.