பதிவு செய்த நாள்
13
மார்
2021
03:03
சென்னை: மகா சிவராத்திரியை முன்னிட்டு, சென்னை, புறநகரில் உள்ள சிவ ஆலயங்களில், சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன. இதில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்று, சிவபெருமானை தரிசித்தனர்.சிவனுக்குரிய விரதங்களாக, மாத, நித்ய, யோக, மகா சிவராத்திரி என, ஆண்டு முழுதும், பல சிவராத்திரிகள் உள்ளன. இதில், மகா சிவராத்திரி விரதம் சிறப்பானது.மாசி மாதம், தேய்பிறை சதுர்த்தசி நாள், மகா சிவராத்திரியாக கொண்டாடப்படுகிறது. இந்த புண்ணிய காலத்தில் சிவனின் நாமம் கூறி, சிறப்பு பூஜைகள் செய்து வழிபடுவது வழக்கம். மகா சிவராத்திரியான நேற்று, சென்னை புறநகரில் உள்ள சிவாலயங்கள் உட்பட, பல இடங்களில் சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது. சிவாம்சம் என்ற அமைப்பு சார்பில், மகா சிவராத்திரியை முன்னிட்டு, ஆர்.ஏ.புரத்தில், ஐந்து லட்சம் ருத்ராக் ஷங்கள் கொண்டு உருவாக்கப்பட்ட, 11 அடி உயர சிவலிங்கத்திற்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டது. மயிலாப்பூர் கபாலீஸ்வரர்; திருவான்மியூர் மருந்தீஸ்வரர், மாடம்பாக்கம் தேனுபுரீஸ்வரர்; பள்ளிக்கரணை ஆதிபுரீஸ்வரர் உள்ளிட்ட சிவ ஆலயங்களில், நான்கு கால பூஜைகள், அபிஷேகங்கள், ஆராதனைகள் நடந்தன.இதில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்று வழிப்பட்டனர். மேலும், பலர் தானம் செய்தனர்