திருப்பரங்குன்றம் : திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலின் உப கோயிலான அங்காள பரமேஸ்வரி சமேத குருநாத சுவாமி கோயிலில் பாரி வேட்டை திருவிழா நடந்தது.
குருநாதன் கோயிலில் எழுந்தருளியுள்ள பேச்சியம்மன், ராக்காயி அம்மன், பெரிய கருப்பண சுவாமி, சங்கிலி கருப்பண சுவாமி, அக்னி வீரபத்திர சுவாமி, இருளப்பா சுவாமிகள் மற்றும் 21 பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு பூஜைகள் நடந்தன. பூஜாரிகள் கிரிவல பாதையிலுள்ள காட்டு பேச்சியம்மன் இருப்பிடம் சென்று வேட்டை சாத்துப்படி செய்து பூஜை நடத்தினர். இரவு சுப்பிரமணிய சுவாமி கோயிலில் இருந்து கொண்டுவரப்பட்ட பூச்சப்பரத்தில் அங்காள பரமேஸ்வரி புறப்பாடாகி, காட்டு பேச்சியம்மன் இருப்பிடம் சென்று பாரி வேட்டை நிகழ்ச்சி நடந்தது. நேற்று மாலை அங்காள பரமேஸ்வரி மீண்டும் சுப்பிரமணிய சுவாமி கோயில் சென்றடைந்தார்.