பதிவு செய்த நாள்
15
மார்
2021
05:03
போத்தனூர்: கோவை - பொள்ளாச்சி தேசிய நெடுஞ்சாலையில், குறிச்சி குளக்கரையில் பொங்காளியம்மன் கோவிலும், பஸ் ஸ்டாப் அருகே கற்பக விநாயகர் கோவிலும் உள்ளன. இதன் மாசி திருவிழா கடந்த, 9ல் கணபதி ஹோமம், கொடியேற்றத்துடன் துவங்கியது. தொடர்ந்து தினமும் சிறப்பு பூஜை நடந்தது.
நாளை மாலை, 6:00 மணிக்கு மேல் அம்மை அழைப்பு மற்றும் திருக்கல்யாணமும் நடக்கின்றன. மறுநாள் காலை, 9:00 மணிக்கு கற்பக விநாயகர் கோவிலிலிருந்து பால்குடம், தீர்த்த குடங்களுடன் ஊர்வலம் அம்மன் கோவிலுக்கு புறப்படுகிறது. மதியம், 12:00 மணிக்கு மகா அபிஷேக அலங்கார பூஜை மற்றும் தீபாராதனையும், மாலை, 5:00 மணிக்கு மாவிளக்கு பூஜையும் நடக்கின்றன. 18 மாலை, 6:00 மணிக்கு அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் அம்மன் வீதி உலா துவங்குகிறது. நிறைவு நாளான, 19 மதியம், 12:00 மணிக்கு மறுபூஜை மற்றும் அன்னதானத்துடன் விழா முடிவடைகிறது. ஏற்பாடுகளை. அனைத்து சமூக பெரிய தனக்காரர்கள், பரம்பரை அறங்காவலர்கள் பூசாரிகள் உள்ளிட்டோர் செய்துள்ளனர்.