பதிவு செய்த நாள்
16
மார்
2021
11:03
சென்னை : திருமலை சிறப்பு தரிசனத்துக்கு, கொரோனா தொற்று பாதிப்பில்லை என்பதற்கான சான்றிதழ் தேவையில்லை. சுற்றுலா வளர்ச்சிக் கழக பஸ்களில் பக்தர்கள் பயணிக்கலாம் என, தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம் அறிவித்துள்ளது.
தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழக அதிகாரிகள் கூறியதாவது:திருமலையில் நடக்கும் சுப்ரபாதம், தோமாலை, கல்யாண உற்சவம் உள்ளிட்ட சிறப்பு சேவையில்பங்கேற்க, வெளிமாநில பக்தர்கள், தொற்று பாதிப்பில்லை என்பதற்கான சான்றிதழ் கட்டாயம்என, தேவஸ்தானம் அறிவித்துள்ளது.ஆனால், 300 ரூபாய் கட்டணத்தில் செல்லும் சிறப்பு தரிசனத்திற்கு, கொரோனா தொற்று பாதிப்பில்லை என்ற சான்றிதழ் கட்டாயமில்லை. இது தொடர்பாக, எந்த சந்தேகமும் வேண்டாம். தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம் சார்பில், திருமலை தரிசனத்திற்கு, சென்னை வாலாஜா சாலையில் உள்ள அலுவலகத்தில் இருந்து, தினமும் காலை, 5:00 மணிக்கு, சொகுசு பஸ் இயக்கப்படுகிறது. திருத்தணி தமிழ்நாடு ஓட்டலில் காலை உணவு; திருமலை ஏழுமலையான் சிறப்பு தரிசனம் முடிந்ததும், மதிய உணவு வழங்கப்படும்.பின், திருச்சானுார் பத்மாவதி தாயார் தரிசனம்முடித்துவிட்டு, வரும் வழியில் மீண்டும் திருத்தணியில் இரவு உணவு வழங்கப்படுகிறது. அன்று இரவே சென்னை வந்தடையலாம். இதற்கு கட்டணம், 1,850 ரூபாய். பக்தர்கள் இந்த சேவையை பயன்படுத்திக் கொள்ளலாம். இவ்வாறு அவர்கள் கூறினர்.