பதிவு செய்த நாள்
16
மார்
2021
12:03
தொண்டாமுத்தூர்: தொண்டாமுத்தூர், வஞ்சியம்மன் நகரிலுள்ள சிறுகள்ளி அம்மன் மற்றும் கருப்பராயன் கோவில் கும்பாபிஷேக விழா, கணபதி பூஜையுடன் துவங்கியது.மாலை யாகசாலை பூஜை, மங்கள இசை, திருவிளக்கு வழிபாடு, மண் எடுத்தல் உள்ளிட்டவை நடந்தன. நேற்று அதிகாலை, 5:30 மணிக்கு திருப்பள்ளி எழுச்சி, திருக்காப்பு அணிவித்தல் நடந்தது.காலை, 8:30 மணிக்கு, சிவாச்சாரியார்கள், திருக்குடங்களை வேள்விச்சாலையில் இருந்து, கோவிலை சுற்றி வலம் வந்தனர். காலை, 9:35 மணிக்கு, விமான கோபுரத்திற்கும், சிறுகள்ளி அம்மனுக்கும் கும்பாபிஷேகம் செய்யப்பட்டது.அதனைத் தொடர்ந்து அம்மனுக்கு மகா அபிஷேகம், சிறப்பு அலங்கார தீபாராதனை நடந்தது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.