பதிவு செய்த நாள்
17
மார்
2021
12:03
நாடியா : வட மாநிலங்களில், வசந்த காலத்தை வரவேற்கும் விதமாக, ஆண்டு தோறும், மார்ச் மாதத்தில், ஹோலி பண்டிகை கொண்டாடப்படுவது வழக்கம். இந்த கொண்டாட்டத்தின்போது, அனைத்து தரப்பினரும், ஒருவர் மீது ஒருவர், வண்ணப் பொடிகளை தூவியும், வண்ண நீரை பீய்ச்சி அடித்தும், தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்துவர்.
ஹோலி பண்டிகை , வரும், 28ல் நாடு முழுதும் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, மேற்கு வங்கத்தின் நாடியா மாவட்ட பெண்கள், முன்னதாகவே கொண்டாட்டங்களை துவக்கி விட்டனர். ஒருவர் மீது ஒருவர், வண்ணப் பொடிகளை தூவியும், வண்ண நீரை பீய்ச்சி அடித்தும், தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.