* தீயவனின் சிரிப்பு இனிப்பானது. இனிப்பு அதிகமானால் நோயைத் தரும். * நல்லவரின் கோபம் கசப்பானது. கசப்பான மருந்து நோய் தீர்க்கும். * கடுமையாக உழைப்பவனுக்கு கவலைப்பட நேரம் இருக்காது. * கோபம் இருப்பவர்களிடம் துரோகம் இருக்காது. * ஒருவரது நடத்தை தான் நண்பர்களையோ, விரோதிகளையோ உருவாக்குகிறது. * பயம், தயக்கம் உள்ளவனை தோல்வி தொடர்ந்து கொண்டே இருக்கும். * கடந்த காலத்தை நினைத்து இன்றைய பொழுதை சரியாக பயன்படுத்துபவனே புத்திசாலி. * காற்று வீசும் திசையில் மலரின் மணம் பரவும். ஆனால் செய்த தர்மம் நாலா திசையும் பரவும். * தன் செயல்களை நேர்மையுடன் செய்து முடிப்பவர்கள் மகிழ்ச்சியாக வாழ்வர். * இழந்த செல்வம், அவமானம், பழிச் சொற்களை விவேகமுள்ளவன் வெளியே சொல்ல மாட்டான். * பலவீனத்தை குறிவைப்பவன் நண்பன் அல்ல, அவன் எதிரி. * அடுத்தவர் வீட்டை உலுக்கினால் உன் வீடு உன் மீதே விழும்.
* ஒருவன் புத்தகங்களை படித்து சேர்த்த அறிவும், பிறரிடம் கொடுத்து வைத்த சொத்தும் தேவைப்படும் போது உதவாது.
* ரகசியங்களை மற்றவரிடம் பகிராதே. இதுவே வெற்றிக்கான மந்திரம்.