* கடமையில் கவனத்தை செலுத்து. அதுவே அமைதிக்கான வழி. * குறைகளை சரிசெய்ய பாருங்கள். முடியாவிட்டால் மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொள்ளுங்கள். * நல்ல எண்ணம் இருந்தால் மட்டுமே ஒழுக்கமுடன் வாழ முடியும். * (தனக்கென வாழாமல் பிறருக்காக வாழ்பவர் உயர்ந்த மனிதன்.) b * பொறுப்பைத் தட்டிக் கழிக்காதீர்கள். தப்பிக்க நினைத்தால் அமைதியை இழப்பீர்கள். * எளிமையாக வாழ்ந்தாலும் சிந்தனையில் உயர்ந்தவராக இருங்கள். * அதிகாலையில் எழுந்ததும் கடவுளை வணங்குவது அன்றாட கடமை. * உங்கள் மீது குற்றம் சுமத்துபவர் மீதும் நன்றியுள்ளவர்களாக இருங்கள். * சத்திய வழியில் நடப்பதும், இடையூறுகளை எதிர்த்து வெல்வதும்தான் வாழ்க்கை. * ஒரு மனிதன் தன்னைப் பற்றி அறிவதற்கு நீண்ட கால போராட்டம் தேவை. * வேதத்தை படித்தால் மட்டும் போதாது. அதை வாழ்வில் பின்பற்ற வேண்டும். * மனஉறுதியுடன் இருங்கள். இல்லாவிட்டால் பேராசை என்னும் நெருப்பு சுடும். * கடவுள் உங்களை எந்த நிலையில் வைத்திருந்தாலும் கவலைப்படாதீர்கள். * எவ்வளவு வேகமாக ஆணவம் அழிகிறதோ அந்தளவுக்கு தெய்வீகம் வெளிப்படும். * மனதை அடக்கும் ரகசியத்தைக் கற்றுக் கொண்டால் எதிலும் சாதிக்கலாம். * ஒருபோதும் பிறரை நம்பாதீர்கள். தேவைகளை சுயமாக நிறைவேற்றுங்கள்.