பழநி: கொடுமுடி தீர்த்த காவடி புகழ்பெற்ற பங்குனி உத்திர திருவிழா பழநியில் மார்ச் 22 அன்று கொடியேற்றத்துடன் ஆரம்பிக்கப்பட உள்ளது.
பங்குனி உத்திரத் திருவிழாவை முன்னிட்டு பழநி திருஆவினன்குடி கோயிலில் மார்ச் 22 அன்று காலை 9:20 மணிக்கு மேல் 10:20 மணிக்குள் கொடியேற்றம் நடைபெறும். பழநியில் இருந்து ஈரோடு மாவட்டம் கொடுமுடி சென்று அங்கிருந்து தீர்த்தக் காவடிகள் எடுத்து வந்து மலைக்கோயிலில் உள்ள முருகனுக்கு அபிஷேகம் செய்வது ஐதீகம். இவ்விழாவில் ஆறாம் நாள் திருக்கல்யாண நிகழ்ச்சி நடைபெறும். அதன்பின் வெள்ளித் தேரோட்டம் நடக்கும். முக்கிய நாளான பங்குனி உத்திரத்தன்று திருத்தேரோட்டம் மார்ச் 28 அன்று நடைபெற உள்ளது. பத்தாம் நாளான மார்ச் 31 அன்று கொடி இறக்கத்துடன் உற்சவம் நிறைவு பெறுகிறது. நாள்தோறும் சவாமி திருவீதி உலா நடைபெறும். விழா ஏற்பாடுகளை கொரானா பரவல் தடுக்கும், நிலையான வழிகாட்டு விதிகளுக்கு உட்பட்டு கோவில் நிர்வாகம் செய்து வருகிறது.