பதிவு செய்த நாள்
19
மார்
2021
05:03
ஈரோடு: திருப்பதி திருமலை சுவாமி தரிசன டிக்கெட் பெற, பக்தர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. ஏப்ரல் மாதம், திருப்பதி திருமலையில் சுவாமி தரிசனம் செய்வதற்கான, சிறப்பு தரிசன டிக்கெட், தங்கும் வசதி, சேவா டிக்கெட்டுகள் வரும், 20 காலை, 9:00 மணிக்கு ஆன்லைன் மூலம், 25 ஆயிரம் டிக்கெட்கள் வினியோகிக்கப்பட உள்ளது. எனவே, இந்த வாய்ப்பை பக்தர்கள் பயன்படுத்தி கொள்ளலாம் என, ஈரோடு ஸ்ரீவாரி சேவா டிரஸ்ட் பொறுப்பாளர் உமாபதி கேட்டு கொண்டுள்ளார்.