பதிவு செய்த நாள்
19
மார்
2021
06:03
மயிலம்,; மயிலம் முருகர் கோவிலில் கிருத்திகை வழிபாடு நடந்தது.மயிலம் வள்ளி, தெய்வானை, சுப்பரமணியர் சுவாமி திருக்கோவிலில் நேற்று கிருத்திகையை முன்னிட்டு காலை 6:00 மணிக்கு கோவில் வளாகத்திலுள்ள பாலசித்தர், வினாயகர், வள்ளி, தெய்வானை, சுப்பரமணியர், நவகிரக சுவாமிகளுக்கு அபிஷேகம், வழிபாடு நடந்தது. காலை 11:00 மணிக்கு பால் சந்தனம், தேன், பஞ்சாமிர்தம், பன்னீர் போன்ற நறுமண பொருட்களினால் சிறப்பு அபிஷேகம் நடந்தது. பின்னர் மூலவர் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். கிருத்திகை விழா ஏற்பாடுகளை பொம்மபுர ஆதீனம் இருபதாம் பட்ட சுவாமிகள் , மற்றும் திருமடத்தினர் செய்திருந்தனர்.