‘‘உறவினர்களுடன் ஒற்றுமையாக வாழ விரும்புகிறேன் அவர்களோ புறக்கணிக்கின்றனர். நான் நன்மையே செய்தாலும் தீங்கு செய்கின்றனர். அவர்கள் விஷயத்தில் பொறுமையுடன் இருக்கிறேன். இருந்தாலும் அநீதி இழைக்கின்றனர்’’ என வருத்தப்பட்டார் தோழர் ஒருவர். அதற்கு நாயகம், ‘‘ நீர் சொல்வது உண்மையானால் அவர்களின் எதிர்காலம் மிக கேவலமாக இருக்கும். உதாசீனம் செய்பவர்களிடம் எதுவரை பொறுமையுடன் நன்மை செய்தீரோ அதுவரை இறைவனின் கருணை உமக்குக் கிடைக்கும். இதுவே பொறுமைக்கு கிடைத்த வெகுமதி. நேசிப்பவரை அலட்சியப்படுத்துபவன் தன் தலையில் தானே மண்ணை அள்ளிப் போட்டவன் ஆவான்’’ என்றார்.