நபிகள் நாயகத்திடம் ஒரு பெண் தன் மகனை அழைத்து வந்தார். ‘‘ஐயா...இவன் அளவுக்கு அதிகமாக இனிப்பு சாப்பிடுகிறான். இப்படி சாப்பிட்டால் உடல்நலன் கெடுமே! நல்ல புத்திமதி சொல்லுங்கள்’’ என வேண்டினார். ‘‘இப்போது இவனை அழைத்துச் செல்லுங்கள். மூன்று நாள் கழித்து மீண்டும் வாருங்கள்,’’ என அனுப்பினார். மூன்றாவது நாள் மகனுடன் வந்தார் அந்தப் பெண். ‘‘தம்பி, இனிப்பை அதிகம் சாப்பிடாதே. உடல்நலனுக்கு தீங்கு உண்டாகும்’’ என்றார் நாயகம். அந்த பெண் புரியாமல் விழித்தாள். ‘‘இதை அப்போதே சொல்லியிருக்கலாமே...தேவையில்லாமல் அலைய வைக்கிறீர்களே...’’ ‘‘அம்மா...நீங்கள் சொல்வது உண்மைதான். ஆனால் அன்று புத்திமதி சொல்லும் தகுதி இல்லாமல் இருந்தேன். எனக்கும் இனிப்பு சாப்பிடும் பழக்கம் இருந்தது. மூன்று நாளாக முயற்சி செய்து அந்த பழக்கத்தை கைவிட்டேன். அதனால் தான் அப்போது என்னால் சொல்ல முடியவில்லை’’ என்றார். சொல்லும் செயலும் ஒன்றாக இருப்பவனே உண்மையாளனாக இருக்க முடியும்.