* ஒற்றுமையுடன் இருப்போர் மீது இறைவனின் கருணை இருக்கும். ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து ஒற்றுமையுடன் செயல்படுங்கள். * உலகம் ஒரு பாலம். அதைக் கடந்து செல்ல முயற்சி செய்யுங்கள். பாலத்திலேயே கட்டிடம் கட்டி தங்க விரும்பாதீர்கள். * உலக ஆசை பாவங்களின் வேர். அதிகமாக ஆசைப்பட்டால் குருடனாகவும் செவிடனாகவும் மாற நேரிடும். * மற்றவர்களுடன் கூட்டாக சேர்ந்து வாழுங்கள். பிரிந்து செல்லாதீர்கள். சொர்க்கத்தை விரும்புபவர்கள் ஒற்றுமையை கடைபிடியுங்கள். * பரிசுத்த நினைவின் காரணமாக எத்தனையோ சிறிய நன்மைகள் பெரிய நன்மைகளாக மாறுகின்றன. * பொது இடங்களில் நடைபாதைகளில் மரம் நடுங்கள். அனைவரும் அதன் நிழலில் தங்கி இளைப்பாறுவர். * நிழல் தரும் மரத்தின் அடியில் அசுத்தம் செய்யாதீர்கள். இல்லாவிட்டால் இறைவனின் கோபத்திற்கு ஆளாவீர்கள். * கடன் கொடுத்து ஒருவருக்கு உதவி செய்வது தர்ம வழியில் நடப்பதற்கு நிகரானது. * நல்ல முறையில் வாங்கிய கடனைத் திருப்பித் தருபவன் சிறந்த மனிதன். பொன்மொழிகள்